/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய கொடியை அவமதித்த 'மாஜி' காங்., பிரமுகர் கைது
/
தேசிய கொடியை அவமதித்த 'மாஜி' காங்., பிரமுகர் கைது
தேசிய கொடியை அவமதித்த 'மாஜி' காங்., பிரமுகர் கைது
தேசிய கொடியை அவமதித்த 'மாஜி' காங்., பிரமுகர் கைது
ADDED : ஜன 28, 2025 12:36 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தேசியக்கொடியை அவமதித்த, 'மாஜி' காங்., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மோழியனுாரில் நேற்று முன்தினம் நடந்த குடியரசு தின விழாவில், காங்., கட்சியினர் வட்டார தலைவர் கண்ணன், 55, தலைமையில் தேசியக் கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த சக்கரவர்த்தி, 58, என்பவர் காங்., கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில், 'நான் நட்ட கொடிக் கம்பத்தில் எப்படி தேசியக்கொடியை ஏற்றலாம்' என கூறி, தேசியக் கொடியின் கயிற்றை அறுத்து அவமதிப்பு செய்தார்.
இதுகுறித்து காங்., வட்டார தலைவர் கண்ணன் அளித்த புகாரில் பெரியதச்சூர் போலீசார், சக்கரவர்த்தியை நேற்று கைது செய்தனர்.