/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த மாஜி அமைச்சர்
/
மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த மாஜி அமைச்சர்
மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த மாஜி அமைச்சர்
மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த மாஜி அமைச்சர்
ADDED : டிச 03, 2024 06:54 AM
விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கிராம பகுதிகளில் மழைநீர் வடிந்த குடியிருப்புகள், விவசாய பயிர்களை சண்முகம் எம்.பி., ஆய்வு செய்தார்.
விழுப்புரம் பூந்தோட்டம், பாண்டியன் நகர் மற்றும் அத்தியூர் திருவாதி, ஓட்டேரிபாளையம், அய்யங்கோவில்பட்டு ஆகிய கிராம பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த வீடுகள் மற்றும் நீரில் மூழ்கிய விவசாய பயிர்களை அ.தி.மு.க., சண்முகம் எம்.பி., நேற்று பார்வையிட்டார். இதில், அ.தி.மு.க., நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், செந்தில் வேலன், கலையரசன், கோகுல்ராஜ், நகர நிர்வாகிகள் கோதண்டராமன், நுார்ஜியாவுதீன், வரதன், ரகுராமன், பாஸ்கர், கிருஷ்ணன், ஜெயவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.