/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' அமைச்சர் பொன்முடி பிறந்த நாள் கொண்டாட்டம்
/
'மாஜி' அமைச்சர் பொன்முடி பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஆக 19, 2025 11:50 PM

விழுப்புரம் : காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் தலைமையில், 75 வகை சீர்வரிசை பொருட்களுடன், முன்னாள் அமைச்சர் பொன்முடி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடியின், 75வது பிறந்தநாள் விழா நடந்தது.
காணை தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கல்பட்டு ராஜா தலைமையில், 75 வகையான சீர்வரிசை பொருட்களுடன் விழுப்புரம் சட்டக்கல்லுாரி நுழைவாயிலில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை ஆயிரம் பேர் ஊர்வலமாக சென்று முன்னாள் அமைச்சர் பொன்முடி பிறந்த நாளை கொண்டாடினர்.
காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர்.
அப்போது, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய துணை சேர்மன் வீரராகவன், ஒன்றிய நிர்வாகிகள் பழனி, நாராயணசாமி, மதன், கருணாகரன், புனிதா அய்யனார், ஒன்றிய கவுன்சிலர்கள் கண்ணகி ராமநாதன், கருணாகரன், சேட்டு, பாரதி நாகராஜ், பாரதி சசி, தேவபூஷ்னம் முருகன், சரவணன், அழகப்பன், வள்ளி கிருஷ்ணமூர்த்தி, கலாவதி ராமலிங்கம், சரசு தேவராஜ், சுப்பிரமணி, ஏழுமலை, ஊராட்சி தலைவர்கள் அற்புதராஜ், கல்யாணசுந்தரம், பாண்டியன், விமலா அறிவழகன், இந்திரா மணி, கிளை செயலாளர்கள் அன்பழகன், சுப்பிரமணி, மாயகிருஷ்ணன், ஏழுமலை, ஞானவேல், போகநாதன், வெங்கடேசன், சத்தியராஜ், சக்கரவர்த்தி கலந்து கொண்டனர்.