/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு; மாஜி அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு

ADDED : டிச 31, 2024 04:49 AM
விழுப்புரம்,: ''தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றங்கள் தொடர் கதையாகி விட்டது'' என அ.தி.மு.க.,. முன்னாள் அமைச்சர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.க., அரசை கண்டித்து நேற்று காலை விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்த முயன்ற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகத்தை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நிருபர்களிடம் சண்முகம் கூறியதாவது:
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வந்த பாலியல் குற்றங்கள், தற்போது தொடர் கதையாகி இருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த குற்றத்தை செய்த நபரை காப்பாற்ற தி.மு.க. அரசு துடிக்கிறது. அ.தி.மு.க. நடத்தும் போராட்டத்தை ஏன் தி.மு.க. அரசு முடக்கப்பார்க்கிறது?
கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பவர்களை பிடிக்க போலீசார் இல்லை. ஆனால் ஜனநாயக முறையில் போராடுகிற எங்களை கைது செய்வதற்கு மட்டும் போலீசார் வருகின்றனர்.
காவல்துறையை நிர்வகிக்கும் முதல்வருக்கு இது அழகா? இவ்வாறு சண்முகம் கூறினார்.