/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'எஸ்.ஐ.ஆர்.,க்கு முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்' மாஜி அமைச்சர் சண்முகம் பேச்சு

ADDED : நவ 20, 2025 05:31 AM

திண்டிவனம்: ''வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு செய்வது தி.மு.க.,தான்'' என்று முன்னாள் அ.தி.மு.க.,அமைச்சர் சண்முகம் பேசினார்.
திண்டிவனம் நகர அ.தி.மு.க.,சார்பில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் குறித்து, பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர ,செயலாளர் தீனதயாளன் தலைமை தாங்கினார்.
இதில் அர்ஜூனன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் கணேசன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் ஏழுமலை, நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, ஐ.டி.,பிரிவு காமேஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., பேசும் போது,'' எஸ்.ஐ.ஆர்., பணிகள் மேற்கொள்வதின் மூலம் போலி வாக்காளர்கள் யார் என்று தெரிந்துவிடும். வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு செய்வது தி.மு.க.,தான். எஸ்.ஐ.ஆர்.,திருத்த பணிகளுக்கு மற்ற கட்சிகள் எதிர்ப்பதில்லை. ஸ்டாலின் மட்டும் எதிர்க்கிறார்.
அ.தி.மு.க.,வினர் அனைவரும் எஸ்.ஐ.ஆர்.திருத்த பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, உண்மையான வாக்காளர்களை சேர்க்க வேண்டும், என்று சண்முகம் பேசினார்.