/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்டாலின் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை விக்கிரவாண்டியில் 'மாஜி' அமைச்சர் சண்முகம் பேச்சு
/
ஸ்டாலின் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை விக்கிரவாண்டியில் 'மாஜி' அமைச்சர் சண்முகம் பேச்சு
ஸ்டாலின் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை விக்கிரவாண்டியில் 'மாஜி' அமைச்சர் சண்முகம் பேச்சு
ஸ்டாலின் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை விக்கிரவாண்டியில் 'மாஜி' அமைச்சர் சண்முகம் பேச்சு
ADDED : ஜன 30, 2024 07:47 AM

விக்கிரவாண்டி : 'ஸ்டாலின் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை' என முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது
வேம்பியில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பன்னீர் தலைமை தாங்கினார். செயலாளர்கள் முகுந்தன், ராஜா, முருகன், நகர செயலாளர் பூர்ணராவ் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் லட்சுமி நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி தலைவர் குமரன், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர்கள் சரவணகுமார், ஜோதி ராஜா, ஒன்றிய தலைவர் பழனி, துணைச் செயலாளர்கள் குமார், பழனியம்மாள், மாவட்ட பேரவை துணைத் தலைவர் பெரியான், ஒன்றிய அணி செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசுகையில், 'தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க., கொண்டு வந்த அனைத்து மக்கள் நல திட்டங்களையும் நிறுத்தி விட்டனர்.
இந்த ஆட்சியில் பால் முதல் அரிசி வரை அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளன. பஸ், மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் போன்றவை 100 சதவீதம் உயர்ந்து விட்டன.
பள்ளி வளாகம் முதல் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா சாக்லேட், கஞ்சா போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஸ்டாலின் குடும்ப அரசியல் நடத்தி அடுத்ததாக தனது மகன் உதயநிதிக்கு பட்டாபிேஷகம் நடத்த நினைக்கிறார்.
இதனால் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை' என்றார்.