/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாட்டு வண்டி ஓட்டிய மாஜி அமைச்சர்
/
மாட்டு வண்டி ஓட்டிய மாஜி அமைச்சர்
ADDED : ஜன 16, 2025 06:50 AM

செஞ்சி: செஞ்சியில் நடந்த மாட்டு பொங்கல் விழாவில் மாட்டு வண்டியை மாஜி அமைச்சர் ஓட்டி சென்றார்.
செஞ்சி பீரங்கி மேட்டில் உள்ள மந்தை வெளியில் மாட்டு பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய வழக்கப்படி கால்நடைகள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ மஞ்சள் நீராட்டு விழா நடத்தி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு மாரியம்மன் கோவிலில் விசேஷ பூஜைகள் செய்தனர்.
கோவிலில் இருந்து மஞ்சள் நீர் உள்ளிட்ட மங்கள பொருட்களை மந்தை வெளிக்கு கொண்டு வந்தனர். அப்போது மஸ்தான் எம்.எல்.ஏ., இரட்டை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டியை மாரியம்மன் கோவிலில் இருந்து மந்தை வெளிவரை ஓட்டி வந்தார்.
பின்னர் மந்தை வெளியில் கால்நடைகளுக்காக நடந்த மஞ்சள் நீராட்டில் கலந்து கொண்டார்.
இதில் செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்டகவுன்சிலர் அரங்கஏழுமலை, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

