/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் நினைவரங்கம் சமூகநீதி போராளிகள் மணிமண்டபம் திறப்பு
/
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் நினைவரங்கம் சமூகநீதி போராளிகள் மணிமண்டபம் திறப்பு
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் நினைவரங்கம் சமூகநீதி போராளிகள் மணிமண்டபம் திறப்பு
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் நினைவரங்கம் சமூகநீதி போராளிகள் மணிமண்டபம் திறப்பு
ADDED : ஜன 29, 2025 05:13 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவரங்கம், சமூக நீதி போராளிகள் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின், நேற்று திறந்து வைத்து, ரூ.882 கோடி மதிப்பில் முடிவுற்ற 231 திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.
விழுப்புரம் அருகே வழுதரெட்டியில், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு ரூ. 4 கோடி செலவில் நினைவரங்கம் மற்றும் 1987ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளுக்கு ரூ. 5.70 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப் பட்டுள்ளது.
இவற்றை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி முழு உருவச் சிலை மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேரின் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, தியாகிகளின் குடும்பத்தினரை முதல்வர் கவுரவித்தார்.
முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மகனான பா.ஜ., மாநில துணைத் தலைவர் சம்பத் குடும்பத்தினர் மற்றும் இட ஒதுக்கீடு போராட்ட சமூக நீதி போராளிகளின் குடும்பத்தினர், முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து நடந்த அரசு விழாவில், மாவட்டத்தில் ரூ.424 கோடியே 98 லட்சம் செலவில் முடிவுற்ற 231 பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். ரூ.133 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலான 116 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.323 கோடியே 71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, பன்னீர்செல்வம், சாமிநாதன், ராஜேந்திரன், எம்.பி.,க்கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிகண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, கலெக்டர் பழனி, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்திநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

