/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
யாதவர் சங்க துணை தலைவர் மறைவு முன்னாள் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
/
யாதவர் சங்க துணை தலைவர் மறைவு முன்னாள் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
யாதவர் சங்க துணை தலைவர் மறைவு முன்னாள் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
யாதவர் சங்க துணை தலைவர் மறைவு முன்னாள் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
ADDED : ஆக 29, 2025 11:48 PM
விழுப்புரம் : தமிழக யாதவர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ராஜாமணி மறைவுக்கு முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொருளாளர் முன்னாள் நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ் மற்றும் புதுச்சேரி பொறியாளர் ரவிசங்கரின் தந்தை ராஜாமணி. வாழை மொத்த வியாபாரி மற்றும் தமிழக யாதவர் சங்க மாநிலத் துணைத் தலைவரான இவர், நேற்று முன்தினம் இயற்கை எய்தினார். இவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது.
முன்னதாக புதுச்சேரி மாநில எதிர்க்கட்சி தலை வர் சிவா, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், எம்.பி., ரவிக்குமார், ஓய்வுபெற்ற எஸ்.பி., மாடசாமி, ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., சங்கர், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, சிந்தனைச்செல்வன், மயிலம் சிவக்குமார், பூந்தமல்லி கிருஷ்ணசாமி, தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் கவுதமசிகாமணி, முன்னாள் எம்.பி., ஆதிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்ப ராஜ், மாசிலாமணி, சேது நாதன், எஸ்.பி.சிவக்குமார் , தமிழக தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சிவா, திருக்கோவிலுார் தொழில திபர் டி.ேக.டி.முரளி, மாவட்ட துணை சேர்மன் தங்கம் ஆகியோர் நேரில் சென்று, ஜனகராஜ் குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினர்.
விழுப்புரம் நகர் மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, திருவண்ணாமலை சேர்மன் ஸ்ரீதரன், காங்., மாநில துணை தலைவர் குலாம்மொய்தீன், மாவட்ட தலைவர் சீனுவாசகுமார் , நகர தலைவர் ெசல்வராஜ், தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, வி.சி. மாவட்ட செயலாளர் பெரியார் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், முக்கிய பிரமுகர்கள் ேநரில் அஞ்சலி ெசலுத்தினர்.

