தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ராமதாசை விமர்சித்து பேசவில்லை மாஜி எம்.எல்.ஏ., விளக்கம்

 ராமதாசை விமர்சித்து பேசவில்லை மாஜி எம்.எல்.ஏ., விளக்கம்

 ராமதாசை விமர்சித்து பேசவில்லை மாஜி எம்.எல்.ஏ., விளக்கம்


ADDED : மே 30, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வானுார்: 'பா.ம.க., நிறுவனர் ராமதாசை நான் விமர்சித்து பேசவில்லை' என, முன்னாள் எம்.எல்.ஏ., சக்ரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

வி ழுப்புரம் மாவட்ட புதிய அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் கண்டமங்கலம் ஒன்றியத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ., சக்கரபாணி, பா.ம.க., நிறுவனர் ராமதாசை விமர்சித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமூக வலை தளங்களில் செய்தி பரவி யது. இதற்கு ராமதாஸ் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவி த்த முன்னாள் எம்.எல்.ஏ., சக்கரபாணி கூறுகையில், 'நான் கடந்த 2016 முதல் 2026 வரை 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாகவும், 10 ஆண்டுகள் மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளேன். இதுவரை நான் ராமதாஸ் பற்றி விமர்சித்தது கிடையாது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில், வன்னிய சமுதாயத்தினர் அதிக அளவில் ஓட்டளித்து என்னை வெற்றி பெற வைத்துள்ளனர்.

கண்டமங்கலம் ஒன்றியத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அங்குள்ள அ.தி.மு.க., ஒன்றிய செய லாளரை பேசியதை, பா.ம.க., நிறுவனரை விமர்சித்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நான் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராமதாஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் சண்முகத்தை மட்டுமே விமர்சித்து பேசினேன். யாரும் என்னை தவறாக நினைக்கக் கூடாது' என் றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us