/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்னாள் எம்.எல்.ஏ., பிறந்த நாள்
/
முன்னாள் எம்.எல்.ஏ., பிறந்த நாள்
ADDED : மார் 27, 2025 04:13 AM

விழுப்புரம்: விழுப்புரம் முன்னாள் எம்.எல்.ஏ., வளவனுார் மணி என்கிற ராசரத்தினம் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
வளவனுாரில் நடைபெற்ற விழாவில், முன்னாள் பேரூராட்சி சேர்மன் வைத்திலிங்கம், முன்னாள் ஒன்றிய சேர்மன் சாரங்கன், பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா, துணைத் தலைவர் அசோக், தி.மு.க., தலைமை கழக வழக்கறிஞர் சுவைசுரேஷ், நகர செயலாளர் ஜீவா, வார்டு செயலாளர் சுபா ராமலிங்கம், முன்னாள் பேரூராட்சி துணை சேர்மன் நாராயணன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏழுமலை, அண்ணாமலை, முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் ரகுபதி, வார்டு பிரதிநிதி ராமு ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், அரசு ஒப்பந்ததாரர் செந்தாமரைக்கண்ணன் என்கிற பாபு, வேளாண் துறை அலுவலர் உமாபதி, ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் ஆறுமுகம், சங்கர், துரை, அன்பழகன், ராமசாமி, சேதுசுப்ராமன், ரவிச்சந்திரன், செல்வம், அசோக், கோபி, பாண்டியன், ஆவின் சுந்தரமூர்த்தி மற்றும் வாணியம்பாளையம் ஆனந்தா நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனுவாசன் தலைமையில் ஆசிரியர்கள், பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.