/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு - தனியார் பஸ் மோதல் நான்கு பேர் படுகாயம்
/
அரசு - தனியார் பஸ் மோதல் நான்கு பேர் படுகாயம்
ADDED : அக் 23, 2025 06:55 AM

செஞ்சி: செஞ்சி அருகே அரசு- தனியார் பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சுற்றுலா சொகுசு பஸ், நேற்று காலை 8:௦௦ மணியளவில், செஞ்சி அடுத்த வல்லம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் இரண்டு பஸ்களில் முன்பகுதி சேதமானது.
விபத்தில் அரசு பஸ்சில் திருவண்ணாமலை மாவட்டம் குளத்துாரை சேர்ந்த பஸ் டிரைவர் முருகன், 49; திருவண்ணாமலையை சேர்ந்த ஹரிஷ், 18; தனியார் பஸ்சில் வந்த திருப்பூர் காதர் கார்டன் பகுதியை சேர்ந்த முகமது அஸ்வித், 22, பொள்ளாச்சி சேர்ந்த கிஷோர்குமார், 20; ஆகியோர் காயமடைந்தனர்
இவர்கள் நான்கு பேரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து .செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறனர்.