/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இன்ஜினியரிடம் ரூ.9.54 லட்சம் மோசடி
/
இன்ஜினியரிடம் ரூ.9.54 லட்சம் மோசடி
ADDED : ஜன 20, 2024 06:25 AM
விழுப்புரம் : ஆன்லைனில் பகுதி நேர வேலை எனக்கூறி இன்ஜினியரிடம் ரூ.9.54 லட்சம் போலீசார் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.
செஞ்சி அடுத்த என்.ஆர். பேட்டையை சேர்ந்தவர் குப்பன் மகன் தேவேந்திரன், 36; இன்ஜினியர். தனியார் நிறுவன ஊழியர். இவரை கடந்த டிச.15ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன் லைனில் பகுதி நேர பணி இருப்பதாக கூறினார்.
இதனை நம்பிய தேவேந்திரன் ரூ.1,034 செலுத்தி, மர்ம நபர் அளித்த டாஸ்கை முடித்து ரூ. 2,034 பெற்றார். தொடர்ந்து, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 26 தவணைகளில் ரூ. 9.54 லட்சம் செலுத்தி, டாஸ்கை முடித்தார். ஆனால், அதற்கான தொகையை தராமல், மர்ம நபர் இணைப்பை துண்டித்துள்ளார்.
புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.