/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
/
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
ADDED : டிச 20, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: மழவந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கஜேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் 65 மாணவர்களுக்கும், 64 மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் அம்பிகா அய்யனார், முன்னாள் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் கலைவாணி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உதவித்தலைமை ஆசிரியர் பெருமாள் நன்றி கூறினார்.

