ADDED : மார் 07, 2026 04:37 AM
அ நிறம் | அளவு
வானுார்: விழுப்புரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், மூத்த குடிமக்கள் நலன், மத்திய மாநில செயல் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கான இலவச கண்புரை பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடந்தது.
வானுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த முகாமை பி.டிஓ.,க்கள் சுபாஷ் சந்திரபோஸ், மணிவண்ணன் துவக்கி வைத்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள் தலைமை தாங்கினார். முகாமில், கண்புரை, கிட்டப்பார்வை, துாரப்பார்வை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற் று பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கெஜலட்சுமி, விரிவாக்க அலுவலர் சரஸ்வதி, செவிலியர் சரண்யா, ஊர்நல அலுவலர்கள் உலகரட்சகை, புஷ்பகலா உட்பட பலர் பங்கேற்றனர்.
