/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி மையம்
/
விழுப்புரத்தில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி மையம்
விழுப்புரத்தில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி மையம்
விழுப்புரத்தில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி மையம்
ADDED : ஜூலை 29, 2025 10:38 PM

விழுப்புரம்; விழுப்புரத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம் துவக்கப்படுகிறது.
விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழுதரெட்டியில்,  முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவரங்கம் மற்றும் 21 சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, வன்னியர் பொது சொத்து நலவாரிய தலைவர் ஜெயராமன், வன்னியர் நல வாரிய உறுப்பினர் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., ஆகியோர் பார்வையிட்டார்.
இதே வளாகத்தில் செயல்பட்டு வரும் நுாலகத்தை ஆய்வு செய்த பின், வன்னியர் நலவாரிய தலைவர் ஜெயராமன் கூறுகையில், 'இந்த நுாலகத்திற்கு, மத்திய அரசு மற்றும் மாநில அரசு பணிகளில் சேர போட்டித் தேர்வுக்கான 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை  அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., வழங்கி யுள்ளார்.
இந்த நுாலகத்தில் மிக விரைவில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வில் பங்கேற்போருக்கு, சென்னையில் உள்ள பிரபல ஐ.ஏ.எஸ்., அகாடமி  மூலம் விரைவில் ஆன் லைன் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது.
இந்த நுாலகத்தில்  கூடுதலாக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, இன்னும் 15 நாட்களில்,  அரசு போட்டி தேர்வுகளுக்கான மையம் விரை வில் துவங்கப்படும்' என்றார்.

