ADDED : அக் 22, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: அனந்தபுரத்தில், ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார்.
புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பிரியங்கா, பிரித்தி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். முகாமில், 75 பேர் சிகிச்சை பெற்றனர்.
20 பேர் அறுவை சிகிச்சைக்கு அ ழைத்துச் செல்லப்பட்டனர். நிகழ்ச்சியில் பிம்ஸ் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், பணியாளர்கள் மதிவாணன் சரண்யா,காயத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.