/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இலவச கண் கண்ணாடி: அமைச்சர் வழங்கல்
/
இலவச கண் கண்ணாடி: அமைச்சர் வழங்கல்
ADDED : செப் 19, 2024 11:25 PM

செஞ்சி: கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி சேர்மன் மொக்தியார் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கார்த்திக் வரவேற்றார்.
அமைச்சர் மஸ்தான் 100க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், நகர பொருளாளர் நெடுஞ்செழியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜான்பாஷா, சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் சேகர், தொண்டரணி பாஷா, கோகுல் உட்பட பலர் பங்கேற்றனர்.