ADDED : மார் 03, 2024 05:27 AM

மரக்காணம்: மரக்கணம் அடுத்த கீழ்புத்துப்பட்டில் ரூ. 23.4 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை கலெக்டர் பழனி ஆய்வு மேற்கொண்டார். மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் இலங்கை தமிழர்களுக்கு ரூ. 23.4 கோடி மதிப்பீட்டில் 440 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பழனி கூறியதாவது: ஒவ்வொரு வீடுகளும் 300 சதுர அடி பரப்பளவில் நான்கு வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. வீட்டிற்கு இடையில் 2.1 மீட்டர் இடைவெளியுடனும், 3.5 மீட்டர் சாலை வசதியுடன் கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றது. குடிநீர், கழிப்பறை, மின்இணைப்பு, சாலை, மேல்நிலை நீர்தேக்க தொட்டி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது என்றார்.
ஆய்வின்போது மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கிடம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
