/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜோசப் கலை கல்லுாரியில் இலவச மடிக்கணினி வழங்கல்
/
ஜோசப் கலை கல்லுாரியில் இலவச மடிக்கணினி வழங்கல்
ADDED : மார் 01, 2026 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: திருநாவலுார் ஜோசப் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வரின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது.
கல்லுாரி செயலாளர் பிரபாகர் ஜெயராஜ் தலைமை தாங்கி பேசுகையில், 'மாணவர்களாகிய உங்களுக்கு வழங்கிய இலவச மடிக்கணினியை கல்விக்கு மட்டும் பயன்படுத்தி நன்றாக படித்து முன்னேற வேண்டும்' என்றார். டீன் கதிர்வேல் வரவேற்றார்.
மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., 126 மாணவர்களுக்கும், தொழிற்பயிற்சி நிறுவனம் 14 மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கினார்.
தாளாளர் கமலா ஜோசப், டீன் கதிர்வேல், முதல்வர் ஏஞ்சல் ஜாஸ்மின் ெஷர்லி உட்பட துணை முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

