
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: ஆலம்பூண்டியில் அ.தி.மு.க., சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டியில் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்றம் மற்றும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி முகாமைத் துவக்கி வைத்தார். இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரித்விராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகதீசன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.