ADDED : நவ 23, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
திண்டிவனம் நகர லயன்ஸ் சங்கம், பிம்ஸ் மருத்துவமனை, கே.எஸ்.பி., துணிக்கடை இணைந்து நடத்திய முகாமிற்கு, சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சடகோபன், பொருளா ளர் குருநாதன், சாசன தலை வர் தேவ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிரிதரபிர சாத் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பங்கேற்ற 200 பேருக்கு பிம்ஸ் மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

