/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இலவச மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
/
இலவச மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
ADDED : டிச 13, 2024 07:18 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வெள்ளம் பாதித்த இருவேல்பட்டு பகுதியில் சுகாதாரத்துறை நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு, தொண்டு நிறுவனத்தினர் மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.
இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட இருவேல்பட்டு, டி.எடையார். சிறுமதுரை, திருவெண்ணெண்நல்லுார், பாவந்துார் பகுதிகளுக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, 'ஹேண்ட்ஸ் டூ ெஹல்ப்' அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் உபகரணங்களை வழங்கினர். அறக்கட்டளை தலைவர் அசோக்ஜிலோதா, வட்டார மருத்துவ அலுவலர் காயத்திரி உட்பட பலர் உடனிருந்தனர்.