ADDED : ஜூலை 28, 2025 10:10 PM
கண்டமங்கலம்; சிறுவந்தாடு கடைவீதியில் உள்ள பாலர் வித்யாலயா பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
வளவனுார் ஜெயம் மருத்துவமனை, சிறுவந்தாடு கவுரி பட்டு சென்டர் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் விழுப்புரம் ஹோஸ்ட் சார்பில் நடந்த முகாமில் லயன்ஸ் கிளப் ஆப் விழுப்புரம் ஹோஸ்ட் மாவட்ட தலைவர் சந்திரன் வரவேற்றார்.
மண்டல தலைவர் ஜெயராமன், வட்டார தலைவர் முத்துகிருஷ்ணன் விழுப்புரம் லயன்ஸ் கிளப் தலைவர் பார்த்திபன், சிறுவந்தாடு கவுரி பட்டு சென்டர் உரிமையாளர் கோபி (எ) வேல்முருகன் முன்னிலை வகித்தார்.
விழுப்புரம் மாவட்ட லயன்ஸ் கி ளப் துணை நிலை ஆளுநர் சரவணன் முகாமை துவக்கி வைத்தார். ஆர்.கே.,மோட்டார்ஸ் உரிமையாளர் குபேரன், ஏ.எஸ்.ஜி., திருமண மண்டப உரிமையாளர் கோபி, விழுப்புரம் நகர காங்., தலைவர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் தாமோதரகுமரன், மகப்பேறு மற்றும் பொது நல மருத்துவ ர் ஜெயந்தி, எலும்பு மருத்துவ சிகிச்சை நிபுணர் சபரிராஜன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதித்து, ஆலோசனை வழங்கினர். 300க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.