/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., பள்ளியில் இலவச நீட் பயிற்சி
/
இ.எஸ்., பள்ளியில் இலவச நீட் பயிற்சி
ADDED : மார் 28, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நீட் குறுகிய கால இலவச பயிற்சி துவக்க நிகழ்ச்சி நடந்தது.
பயிற்சியை பள்ளி தாளாளர் செல்வமணி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இதே போல் நடந்த நீட் இலவச குறுகிய கால பயிற்சியில் 43 மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.
இந்த பயிற்சியில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் உடனே, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இ.எஸ்., லார்ட்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியை அணுகலாம். இத்தகவலை பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.