ADDED : அக் 26, 2024 07:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில், கரசானுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை ஒன்றிய கவுன்சிலர் கணேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வானுார் மேற்கு ஒன்றிய பா.ம.க., செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாமில், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக்குழுவினர், பொது மக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டனர்.
முகாமில், கண், சர்க்கரை நோய், குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஊராட்சி துணைத்தலைவர் தமிழரசி கணேசன், முன்னாள் கவுன்சிலர் குமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.