ADDED : பிப் 23, 2024 10:20 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில், நகர அ.தி.மு.க., சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு நடந்த முகாமிற்கு, எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் தலைமை தாங்கினர்.
நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், முன்னாள் கவுன்சிலர் சண்முகம் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சந்தோஷ் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் சண்முகம் முகாமைத் துவக்கி வைத்தார். தங்கம் பாரத் காஸ் சர்வீஸ் மற்றும் புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் நடந்த முகாமில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
முகாமில், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அற்புதவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, பன்னீர், மாவட்ட மாணவரணி சக்திவேல், மருத்துவரணி முத்தையன், விக்னேஷ், பாசறை நிர்வாகிகள் தங்க பாண்டியன், வினித், ஜெ., பேரவை திருப்பதி பாலாஜி, வர்த்தக அணி செந்தில்வேலன், ரகுராமன், இளைஞரணி குமரன், செந்தில், ரமேஷ், ஜியாவுதீன், வார்டு செயலாளர் பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.