ADDED : செப் 12, 2025 03:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில், 5 ஜோடிகளுக்கு தலா 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர் வரிசை பொருட்களுடன் இலவச திருமணம்நடந்தது.
மஸ்தான் எம்.எல்.ஏ., திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார், கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், அறநிலைத்துறை ஆய்வாளர் சங்கீதா, பணியாளர் இளங்கீர்த்தி மற்றும், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.