/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் நட்பு நாள் விழா
/
அரசு கல்லுாரியில் நட்பு நாள் விழா
ADDED : ஜூலை 31, 2025 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலக நட்பு நாள் விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் அமைப்புத் தலைவர் அரியபுத்திரன் முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் மணவாளன் வரவேற்றார். பேராசிரியர் பாபு நோக்கவுரையாற்றினார். பேராசிரியர்கள் சுவாமிநாதன், சுமதி, ரங்கநாதன், ஆசிரியர் கோவிந்தராஜன் வாழ்த்தி பேசினர்.
அப்போது பேராசிரியர்கள் ரம்யா, ரேவதி, கிருஷ்வர், நித்யா, விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சின்னதுரை நன்றி கூறினார்.