/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்
/
சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்
சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்
சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்
ADDED : ஏப் 14, 2025 06:22 AM
செஞ்சி: செஞ்சி சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ 7.78 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி துவங்கியது.
செஞ்சி பகுதியில் உள்ள காடு மலைகளில் பொழியும் காட்டு வெள்ளம் சங்கராபரணி ஆற்றில் கலந்து செஞ்சியை கடந்து செல்கிறது. பெரிய அளவில் வெள்ளம் சென்றாலும், சில தினங்களில் வெள்ளம் வடிந்து ஆற்றில் தண்ணீர் இருக்காது.
கோடையின் போது செஞ்சி நகரின் நிலத்தடி நீர்மட்டம் குறையும். விவசாய கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
எனவே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சங்கராபரணி ஆற்றின் குறுக்கே வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என 30 ஆண்டுகளாக விவசாயிகளும், செஞ்சி நகர மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் எதிரொலியாக நேற்று மேல்களவாய் கிராம எல்லையில் சங்கராபரணி ஆற்றில் ரூ.7.78 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் துவங்கின. மஸ்தான் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ், ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, அன்பு செழியன், ஒன்றிய செயலாளர்கள் இளம்வழுதி, மணிமாறன் உதவி பொறியாளர்கள் தெரேசா, சதீஷ் கண்ணா, ஊராட்சி தலைவர் கலைச்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

