ADDED : செப் 23, 2024 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், துாய்மை பாரத இயக்கம் சார்பில், துாய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமிற்கு, கோலியனுாார் வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மாசினி தலைமை தாங்கினார்.
ஊராட்சி தலைவர் ஏழுமலை, துணை பி.டி.ஓ., நாகராஜன் முன்னிலை வகித்தனர். பொது சுகாதார நிபுணர் நிஷாந்த் தலைமை யில் மருத்துவக் குழுவினர், பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையளித்தனர்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய பரிசோதனை, கர்ப்ப பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொண்டனர்.
கண்டமானடி, அரிய லுார், கொளத்துார், தளவானுார், திருப்பாச்சனுார், காவணிப்பாக்கம், மரகதபுரம் ஊராட்சிகளின் தூய்மை பணியாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.