/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்து கழகத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு நிதி
/
போக்குவரத்து கழகத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு நிதி
போக்குவரத்து கழகத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு நிதி
போக்குவரத்து கழகத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு நிதி
ADDED : அக் 13, 2024 07:54 AM

விழுப்புரம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலத்தில் பணிபுரிந்து இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு, ஊழியர்களிடம் பிடித்தம் செய்த நிதித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் போக்குவரத்து கழக தலைமை பணிமனையில் நடந்த நிகழ்ச்சியில், இறந்த தொழிலாளர்களுக்கு தலா 5 லட்சம் விதம் 8 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. பணியின் போது இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் காசோலையாக 6 மண்டலங்களைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மூலம் வழங்கப்பட்டது.
மேலும், தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 27 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய மற்றும் சிறப்பு இயக்கத்தின் போது 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டிய 304 ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மண்டல அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.