/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கேலோ விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு மாரத்தான்
/
கேலோ விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : ஜன 13, 2024 04:06 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளை யாட்டுப் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
தமிழகத்தில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் வரும் 19 முதல் 31ம் தேதி வரை, சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்துார் ஆகிய இடங்களில் நடக்கிறது.
இதுகுறித்து பொதுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழுப்புரத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஊர்வலம் நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஓட்டத்தை கலெக்டர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் துவங்கி, எல்லீஸ்சத்திரம் சாலை, புதிய பஸ் நிலையம் வழியாக வந்து பெருந்திட்ட வளாகத்தில் முடிந்தது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி, குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய மாரத்தான் கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. போட்டியை டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து விளையாட் டுப் போட்டிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த குறும் படங்கள் காண்பிக்கப்பட்டது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம், திருக்குறள் ஒப்பித்தல் போட்டியும் நடந்தது.
தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். டி.எஸ்.பி., ரமேஷ், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வக்குமார், இயக்குனர் பாலுசாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.