நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : வாணியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது.
திண்டிவனம் வாணியர் முன்னேற்ற சங்க திருமண மண்டபத்தில், காந்தியின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திக் கருணாகரன் வரவேற்றார்.
இதில் துணை செயலாளர்கள் அன்னை சஞ்சீவி, சீனிவாசன், சர்க்கரை, விநாயகம், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சீனிவாசன், விஜயன் சட்ட ஆலோசகர் துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்க பொருளாளர் பாலாஜி நன்றி கூறினார்.இதை தொடர்ந்து காந்தி சிலை அருகே ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.