/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விநாயகர் சிலைகள் விஜர்சனம் ஊர்வலம்
/
விநாயகர் சிலைகள் விஜர்சனம் ஊர்வலம்
ADDED : ஆக 29, 2025 11:41 PM

திண்டிவனம் : திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து வந்திருந்த விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பில் கடலில் கரைக்கும் வகையில் விஜர்சனம் ஊர்வலம் நடந்தது.
திண்டிவனம் உட்கோட்டத்தில், 322 சிலைகள் போலீசாரிடம் முன் அனுமதி பெற்று, கடந்த 27 தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த சிலைகள் அனைத்தும் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் மரக்காணம் அருகே கைப்பாணிக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் கரைக்கும் நிகழ்ச்சியான விஜர்சன ஊர்வலம் நடந்தது.
திண்டிவனம் செஞ்சி ரோடு, அங்காளம்மன் கோவில் அருகிலிருந்து சிறப்பு பூஜை, தாரை தப்பட்டத்துடன் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விஜர்சன குழு ஒருங்கிணைப்பாளர் பிரபு வரவேற்றர்.
நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்.வடதமிழகம் மாநில பொறுப்பாளர் செந்தில்குமார் சிறப்புரையற்றினார்.
இதில், தொழில்அதிபர் கே.ஆர்.எஸ். சுப்ராயலு, செஞ்சி கோபிநாத், பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெயராஜ், பா.ஜ., மாவட்ட தலைவர் விநாயகம், நகர தலைவர் வெங்கடேசபெருமாள், முன்னாள் பொதுச்செயலாளர் எத்திராஜ், நிர்வாகிகள் பிரபு, ஏழுமலை, தினேஷ்குமார், துரைசோழன், முன்னாள் கவுன்சிலர் சவுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாது காப்புடன் கைப்பாணிக்குப்பம் கடற்கரைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.