/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடூர் அணையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
/
வீடூர் அணையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
ADDED : ஆக 30, 2025 11:47 PM

விக்கிரவாண்டி: வீடூர் அணையில் மேளதாள முழக்கங்களுடன் விநாயகர் சிலைகளை பக்தர்கள் விஜர்சனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்81
இடங்கள்; பெரிய தச்சூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட64இடங்கள்; என மொத்தம்,145இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மூன்றாவது நாளான நேற்றுமுன்தினம்விக்கிரவாண்டி அடுத்த வீடுர் அணைக்கு வழிபட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையோடு வேன்களில் கொண்டு வந்து, 133சிலைகளை தண்ணீரில் கரைத்து விஜர்சனம் செய்தனர். மீதமுள்ள சிலைகள், 5ம் நாள்ஞாயிற்றுக்கிழமை அஷ்டமி என்பதால், 7வது நாள் செவ்வாய்க்கிழமையன்று விஜர்சனம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கிரவாண்டிடி.எஸ்.பி., சரவணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

