/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காங்., கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
/
காங்., கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 07, 2025 06:38 AM

திண்டிவனம்; மத்திய அரசின் வக்ப் வாரிய சட்ட திருத்த மாசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டிவனத்தில் காங்., சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., சார்பில் திண்டிவனம் தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நகர காங்., தலைவர் வினாயகம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கருணாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், வட்டார தலைவர்கள் செல்வம், காத்தவராயன், புவனேஸ்வரன், இளவழகன், மண்ணாங்கட்டி, நகரத் தலைவர்கள் குமார், சூரியமூர்த்தி, முகமது எட்ரிஸ், எஸ்.சி., பிரிவு மாநில துணைத்தலைவர் உதயனந்தம் நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, வெங்கட், ராமமூர்த்தி, காமராஜ், சாமிநாதன், கண்ணன், முருகானந்தம், கனகராஜ், ஊடகப்பிரிவு ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

