ADDED : ஜூன் 19, 2025 11:51 PM

மயிலம் : மயிலம் வட்டார காங்., சார்பில் ராகுல் காந்தியின் 55வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
முகாமிற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் எம்.பி., முகாமை துவக்கி வைத்து பேசினார். அகில இந்திய காங்., உறுப்பினர் கிருஷ்ணதாஸ், மயிலம் வட்டார தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் வரவேற்றார்.
மயிலம் வட்டார தலைமை மருத்துவர் அலுவலர் தேன்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் 15 பேரிடமிருந்து ரத்தம் சேகரித்தனர்.
மாவட்ட முன்னாள் தலைவர் தனுசு, திண்டிவனம் நகர தலைவர் வினாயகம், மாவட்ட செயலாளர் தாமோதரன், வட்டார துணைத் தலைவர் சீதாபதி, இளைஞர் காங்., மாவட்ட தலைவர் குமார், வட்டார நிர்வாகி நாகப்பன், ஏழுமலை.
வட்டாரத் துணைத் தலைவர் சுரேஷ்பாபு, ஐ.டி., விங் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் இருதயராஜ், செயலாளர் அர்ஜூனன், பாபு, ஐ.டி., விங் மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், ராஜ்குமார், வழக்கறிஞர்கள் அஜிஸ், பொன் ராஜா, பள்ளிக்குளம் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.