/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொகுசு காரில் ஆடு திருடிய கும்பல்; குறைந்த விலைக்கு விற்று உல்லாசம்
/
சொகுசு காரில் ஆடு திருடிய கும்பல்; குறைந்த விலைக்கு விற்று உல்லாசம்
சொகுசு காரில் ஆடு திருடிய கும்பல்; குறைந்த விலைக்கு விற்று உல்லாசம்
சொகுசு காரில் ஆடு திருடிய கும்பல்; குறைந்த விலைக்கு விற்று உல்லாசம்
ADDED : ஜூலை 01, 2025 01:54 AM

விழுப்புரம் : விழுப்புரம் பகுதியில் சொகுசு காரில் ஆடு திருட்டில் ஈடுபட்ட புதுச்சேரி வாலிபர்கள், குறைந்த விலைக்கு ஆடுகளை விற்று மதுபானம் குடித்து உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
விழுப்புரம் மற்றும் வளவனுார், கண்டமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆடு திருட்டு அதிகரித்து வந்தது. வளவனுார் புதுப்பாளையம் கொங்கமேடு ராஜேந்திரன், 60; என்பவரின் 5 வெள்ளாடுகளை, கடந்த 25ம் தேதி திருடுபோனது. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர்.
சி.சி.டி.வி., கேமரா பதிவு மூலம் சொகுசு காரில் ஆடுகள் திருடிய புதுச்சேரி கணுவாப்பேட்டை நித்திஷ், 21; நவீன்ராஜ், 22; வில்லியனுார் திருக்காஞ்சி விக்னேஷ், 22; கடலுார் கீழ் குமாரமங்கலம் ஹேமந்த், 24; ஆகியோரை கைது செய்து, சொகுசு கார் மற்றும் 12 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், நண்பர்களான நால்வரும், இரவு நேரங்களில் குடிபோதையில் கிராமப்புற சாலைகளில் காரில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது, சாலையோரத்தில் அடைத்து வைத்துள்ள ஆடுகளை திருடி காரில் எடுத்து சென்று வில்லியனுார் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். குறிப்பாக சனிக்கிழமை இரவு மற்றும் செவ்வாய் கிழமை இரவு ஆகிய 2 நாட்களில் மட்டும் ஆடுகளை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருடிய ஆடுகளை தலா 3,000 ரூபாய்க்கு கறிகடைகளில் விற்பனை செய்து, அதில் வந்த பணத்தில் மதுபானம் வாங்கி குடித்து உள்ளாசமாக இருந்தது தெரியவந்தது.