/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பறக்கும் படையினர் சோதனை கஞ்சா கடத்தியவர் சிக்கினார்
/
பறக்கும் படையினர் சோதனை கஞ்சா கடத்தியவர் சிக்கினார்
பறக்கும் படையினர் சோதனை கஞ்சா கடத்தியவர் சிக்கினார்
பறக்கும் படையினர் சோதனை கஞ்சா கடத்தியவர் சிக்கினார்
ADDED : மார் 18, 2024 03:49 AM
விழுப்புரம் :  விழுப்புரத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் கஞ்சா கடத்தி வந்த நபர் பிடிபட்டார்.
விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையம் பைபாஸ் சந்திப்பில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் முருகேசன் தலைமையில், நேற்று மாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது, பஸ்சில் இருந்து இறங்கி நடந்து வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.
அதில் அவர், பையில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில், செஞ்சி அடுத்த முட்டத்துாரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வமுருகன், 23; என்பதும், 10 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து, செல்வமுருகனை பறக்கும் படையினர், விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.