தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குப்பைகள் அகற்றம்

 குப்பைகள் அகற்றம்

 குப்பைகள் அகற்றம்


ADDED : மே 20, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: நகராட்சி இடுகாட்டில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.

திண்டிவனம் சலவாதி ரோட்டில் நகராட்சி மின் தகன மேடை மற்றும் நகராட்சி இடுகாடு அருகருகே அமைந்துள்ளது. இதில் இடுகாட்டு பகுதியில் அதிக அளவில் இறந்தவர்களின் சமாதி உள்ளது. இந்த இடத்தில் சமாதியை மறைக்கும் வகையில் நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மலை போல் குவித்து, தீ வைத்து வருவது குறித்து கடந்த 18ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

அதனைத் தொடர்ந்து நகராட்சி கமிஷனர் பானுமதி உத்தரவின்பேரில், இடுகாட்டு பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us