/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காஜி நியமனம் ரத்து கலெக்டர் தகவல்
/
காஜி நியமனம் ரத்து கலெக்டர் தகவல்
ADDED : செப் 19, 2024 11:16 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காஜி மற்றும் காஜி தேர்வுக்குழு உறுப்பினர் பதவி குறித்து, கடந்தாண்டு அறிவித்த உத்தரவை அரசு ரத்து செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு காஜி மற்றும் காஜி நியமன தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 18 மற்றும் 21ம் தேதிகளில் பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டது.
இந்த தேர்வு குறித்த அரசின் தெளிவுரையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள காஜியின் நியமன ஆணையில் குறிப்பிட்ட கால வரம்பு, குறிப்பிடப்படவில்லை.
இந்த காரணத்தினால் காஜி சட்டம் 1880, பிரிவு 2ன் கீழ், விழுப்புரம் மாவட்டத்திற்கு நிரந்தரமாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட காஜியாக கருதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 18 மற்றும் 21ம் தேதிகளில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தியானது ரத்து செய்யப்படுகிறது.
மேலும், பத்திரிகை செய்தியின் மூலம் விழுப்புரம் மாவட்ட காஜி மற்றும் காஜி தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு வரப்பெற்றுள்ள விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுகிறது.
இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.