
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே இலவச பொது நல மருத்துவ முகாம் நடந்தது.
மேல்மலையனுார் அடுத்த வடபாலை கிராமத்தில் திண்டிவனம் ஓ.பி.ஆர்., அறக்கட்டளை, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை சார்பில் நடந்த முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.
மாவட்ட கவுன்சிலர் செல்விராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், காசியம்மாள், ஊராட்சி தலைவர் சங்கீதா சீனுவாசன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொதுமக்களுக்கு பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்.