/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்கள் மாயம்: பெற்றோர் புகார்
/
பெண்கள் மாயம்: பெற்றோர் புகார்
ADDED : டிச 04, 2025 05:31 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாயமான இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கோணங்கிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் நித்யா,19; , பி.எஸ்.சி., பட்டதாரி. இவர் ஈரோடு அடுத்த சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிகிறார். இவர், கடந்த 1ம் தேதி வீட்டிலிருந்து பணிக்கு சென்றவர் மீண்டும் வரவில்லை. விசாரணையில் நித்யா பணிக்கும் செல்லாதது தெரியவந்துள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பெண்ணை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம் விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல் மகள் நித்யஸ்ரீ,23; இவர் கடந்த 30ம் தேதி வீட்டிலிருந்து கடலுாருக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வரவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

