ADDED : ஜன 06, 2025 04:53 AM
விழுப்புரம்,:   ரங்கோலி மற்றும் டிசைன் கோலங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, சிறுதானிய பயன்பாடுகள், சுகாதாரமான காற்றை சுவாசித்தல், காய்கறிகளின் பயன்பாடு, சாதிக்கும் பெண்களின் முன்னேற்றம் உட்பட பல சமூக விழிப்புணர்வான கோலங்களை காண முடிந்தது. இங்கு, இயற்கை உணவான காய்கறிகள், அரிசி வகைகள் பெரும்பாலும் விழிப்புணர்வு கோலங்களாக போட்டிருந்தனர்.
நியூ டிசைன் கோலங்கள்: டிசைன் கோலத்தில் சிறுவர்கள் விளையாடும் ரிமோட் மூலம் மயில்களின் இறகு நகர்வது போல வண்ணமயமான கோலமிட்டு இருந்தனர். நாணயங்களின் தங்கநிறம், வெள்ளி நிறங்களால் கோலத்தின் வண்ணங்களை வேறுபடுத்தி வித்தியாசமான டிசைன்களை தீட்டியிருந்தனர். இந்த கோலங்கள் பார்வையாளர்கள், பொதுமக்களின் கண்களை வெகுவாக கவர்ந்தது.
வண்ண கோலத்தில் 'தினமலர்' நிறுவனர் படம்: டிசைன் கோலத்தில் பெண்மணி ஒருவர், 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் உருவத்தை கோலமாக தீட்டியிருந்தார்.
இது மட்டுமின்றி, தினமலரின் வாரமலர், சிறுவர் மலர், ஆன்மிக மலர் போன்ற புத்தகத்தின் அட்டை பிரதியையும் அதே வண்ணங்களில் ரம்மிய கோலமாக தீட்டியிருந்தனர்.

