/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்வர்ணாலயா நகை கடையில் வைர நகை கண்காட்சி
/
ஸ்வர்ணாலயா நகை கடையில் வைர நகை கண்காட்சி
ADDED : ஆக 21, 2025 07:43 AM

விழுப்புரம்: விழுப்புரம் ஸ்வர்ணாலயா நகை கடையில் மிக பிரம்மாண்ட வைர நகை கண்காட்சி நடைபெற்றது.
இந்த வைர நகை கண்காட்சியையும், வாடிக்கையாளர்களுக்கான முதல் விற்பனையையும் ஸ்ரீ மகாலட்சுமி குழும தலைவர் பிரகாஷ் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தோரை நிர்வாகிகள் பிரவீன்குமார், ஸ்வாதி ஆகியோர் வரவேற்றனர்.
இந்த கண்காட்சியில், 200க்கும் மேற்பட்ட டிசைன்கள், மாடல்களில் வைர நகைகள், வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதில் ரூ.3 ஆயிரம் முதல் நகைகள், மூக்குத்தி, தோடு, மோதிரம், அட்டிகை, நெக்லஸ், ஆரம், முகப்பு, பிரேஸ்லெட், ஒட்டியாணம் உள்ளிட்ட அனைத்து வகையான நகைகளும் கண்காட்சியில் ஜொலித்தன.
இந்த கண்காட்சியில், வாடிக்கையாளர்கள் பலரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு நகைகளை பார்வையிட்டதோடு, அவர்களுக்கு பிடித்தமான டிசைன்களை விரும்பி மன மகிழ்வோடு வாங்கி சென்றனர்.
கண்காட்சியில் முதல் விற்பனையை வாடிக்கையாளர் அன்பு சேதுபாண்டியன் பெற்று கொண்டார்.