/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அழகன்குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் ரூ.235 கோடி திட்டத்திற்கு அரசு ஒப்புதல்
/
அழகன்குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் ரூ.235 கோடி திட்டத்திற்கு அரசு ஒப்புதல்
அழகன்குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் ரூ.235 கோடி திட்டத்திற்கு அரசு ஒப்புதல்
அழகன்குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் ரூ.235 கோடி திட்டத்திற்கு அரசு ஒப்புதல்
ADDED : பிப் 09, 2025 06:40 AM

விழுப்புரம்: மரக்காணம் அடுத்த அழகன்குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதுதொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
மரக்காணம் அடுத்த அழகன்குப்பம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி, மீன்பிடி துறைமுகம் திட்ட உதவி பொறியாளர் (கடலுார் உபகோட்டம்) முத்தமிழ்ச்செல்வி, மரக்காணம் தாசில்தார் பழனி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில், விழுப்புரம் மாவட்டம், அழகன்குப்பத்திலும், செங்கல்பட்டு மாவட்டம், ஆலம்பரைகுப்பத்திலும், 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகங்கள் அமைத்திட, தமிழக அரசால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு பணி முடிந்துள்ளது. வரைவு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கை தயார் செய்யும் பணி நடக்கிறது. மேலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில், அழகன்குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது' என்றார்.