/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொபட் மீது அரசு பஸ் மோதல்; கணவன் கண் முன் மனைவி பலி
/
மொபட் மீது அரசு பஸ் மோதல்; கணவன் கண் முன் மனைவி பலி
மொபட் மீது அரசு பஸ் மோதல்; கணவன் கண் முன் மனைவி பலி
மொபட் மீது அரசு பஸ் மோதல்; கணவன் கண் முன் மனைவி பலி
ADDED : அக் 13, 2025 06:38 AM
திண்டிவனம்; திண்டிவனம் அருகே மொபட் மீது அரசு பஸ் மோதியதில், கணவன் கண் எதிரில் மனைவி பரிதாபமாக இறந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், கரிசங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம், 60; இவரது மனைவி கஸ்துாரி, 55; இருவரும் நேற்று மொபட்டில் திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வந்துவிட்டு திரும்பினர்.
ஓங்கூர் கூட்ரோட்டில் சென்றபோது, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ், மொபட் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த கஸ்துாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவலிங்கத்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து, அரசு பஸ் டிரைவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் புது உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், 32; மீது ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.