/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ்சில் குட்கா கடத்தல் அரசு பஸ் கண்டக்டர் கைது
/
பஸ்சில் குட்கா கடத்தல் அரசு பஸ் கண்டக்டர் கைது
ADDED : அக் 26, 2025 03:25 AM

திண்டிவனம்: திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் அரசு பஸ்சில் ஒருவர் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக திண்டிவனம் போலீசுக்கு கதவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் திண்டிவனம் மேம்பாலத்தில் மேல் பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த அரசு பஸ்சில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அதில் பஸ்சை விட்டு இறங்கிய நபர், குட்கா பொருட்கள் எடுத்து வந்தது தெரிய வந்தது.
விசாரணையில், மேல்மலையனுார் அடு த்த மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி, 43; செஞ்சி பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிவதும், திண்டிவனத்தில் சிலருக்கு சப்ளை செய்வதற்காக குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
உடன், வழக்குப் பதிந்து தண்டபாணியை கைது செய்து, 90 குட்கா பாக்கெட்டுகளை பறி முதல் செய்தனர்.

