/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுங்க கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் நிறுத்தம்: பயணிகள் அவதி
/
சுங்க கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் நிறுத்தம்: பயணிகள் அவதி
சுங்க கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் நிறுத்தம்: பயணிகள் அவதி
சுங்க கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் நிறுத்தம்: பயணிகள் அவதி
ADDED : டிச 24, 2024 08:12 AM

உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் சுங்க கட்டணம் செலுத்தாத அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கும்பகோணம் கோட்ட அரசு பஸ் ஒன்று நேற்று சென்னையில் இருந்து பெரம்பலுாருக்கு சென்று கொண்டிருந்தது.
காலை 9.00 மணிக்கு உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் சென்றபோது, சுங்க கட்டணத்திற்கு 'பாஸ்ட் ட்ராக்'கில் பணம் இல்லாததால் பஸ் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரமாகியும் சுங்க கட்டணம் செலுத்தாததால், டோல்கேட் பகுதியிலேயே பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பயணிகள் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்குமாறு பயணிகள் கூறினர். அதன் பேரில் காலை 10.20 மணியளவில் மாற்று பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்தனர்.
சுங்க கட்டணம் செலுத்திய பிறகு 10.40 மணியளவில் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.